வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தியவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, July 27, 2020

வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தியவர் கைது

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் பெண்கள் வார்ட்டிற்கு, வைத்தியர் போன்று தன்னை அடையாளப்படுத்தி வந்த நபர் ஒருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் (25) பிற்பகல் 3.55 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திஹாரி, தர்கா மாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரிடமிருந்து இதயத் துடிப்புமானி (stethoscope) 01 உம், போலி இறப்பர் முத்திரை 01 உம், சிரின்ஜர் ( syringe) 01உம், சேலைன் குழாய் (saline tube) 01 உம், ஈ.சி.ஜி. ரோல் (rolls of ECG paper) 05 உம், மடிக்கணினி 01 உம், தொலைபேசி 01 உம், மோட்டார் சைக்கிள் 01 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபரை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபரை, அத்தனகலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (26) முன்னிலைப்படுத்தியபோதே, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad