எமது பலம் நிரூபிக்கும் காலம் பிறந்து விட்டது. இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் மலையக மக்கள் ஓரணியாக திரண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற பிரசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், மலையக மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட கூடாது. அவை முறையாகவும் முழுமையானதாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சின்னத்துக்கு வாக்களித்தால் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
பலரும் இக்காலக்கட்டத்தில் மக்களின் வீடு தேடி வரலாம். ஆனால் மக்களோடு என்றும் இருப்பது நாமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் என்பதையும் மக்கள் மறந்துவிடக்கூடாது. எனவே, அனைவரும் இணைந்து ஓரணியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தை இப்பொதுத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பிரசார நிகழ்வின் போது கொட்டகலை பிரதேசத்தின் சில இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூவுடன் இணைந்து கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
பூண்டுலோயா நிருபர்
No comments:
Post a Comment