கொவிட்-19 தொற்று நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல், 03 நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 91 பேரை ஏற்றிய 04 விசேட விமானங்கள் இன்று (02) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
கட்டாரின் டோஹா நகரிலிருந்து முதல் விமானம் நாட்டை வந்தடைந்ததுடன், அதில் 21 இலங்கையர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்களை ஏற்றிய 02 விமானங்கள் நாட்டை வந்தடைந்ததுடன், இதில் முதல் விமானத்தில் 61 பேரும், இரண்டாவது விமானத்தில் 08 பேரும் வந்தடைந்துள்ளனர்.
மற்றுமொருவர், அபுதாபி நகரிலிருந்து வந்தடைந்துள்ளார். இவ்விமான பயணிகள் அனைவரும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment