அமீர் அலியுடன் இணைந்தார் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வேட்பாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

அமீர் அலியுடன் இணைந்தார் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வேட்பாளர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக இலக்கம் 2 இல் போட்டியிடும் வேட்பாளர் கணேசன் சுரேஷ் இன்று (திங்கட்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியுடன் இணைந்து அவரது வெற்றிக்காக செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஓட்டமாவடி இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை பிரதி தவிசாளர் எஸ்.சந்திரபாலன் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.தையூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment