மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் கிராமம் பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள காணியில் நிலத்திற்கு வெளியே துப்பாக்கி தெரிந்த நிலையில் கண்டு பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பொலிசார் அப்பகுதியை சோதனையிட்டதுடன் துப்பாக்கி இருந்த பகுதியின் நிலப்பகுதியை மேலும் தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றனர்.
இதனையடுத்து தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியை தோண்டி தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது பாவிக்க முடியாத நிலையில் இருந்த 2 ரி-56 ரக துப்பாகிகளை மீட்டுள்ளதுடன் இது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகளாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment