திருமணத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

திருமணத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு

திருமண வைபவத்தில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் உச்சபட்சம் 300 பேர் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது உச்சபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருமண நிகழ்வில் கலந்துகொள்வோர், சமூக இடைவெளியைப் பேணுவதோடு, மண்டபங்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா பரவல் நிலை காரணமாக ஒன்றுகூடல்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் திருமண வைபவங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கொரோனா பரவல் தளர்வையடுத்து, திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை 100ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அண்மையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கடந்த மாதம் (23) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இவ்வெண்ணிக்கையை அதிகரிக்குமாறு, அகில இலங்கை நிகழ்வு மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில், சுகாதார அமைச்சினால் ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டல்கள்

No comments:

Post a Comment