குருநாகல் மாவட்டத்தில் 20 வருடங்களின் பின்னர் இம்முறை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்வோம் என குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் எஸ். சஹாப்தீன் தெரிவித்தார்.
குருநாகல் பந்தாவையில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், ஐக்கிய தேசிய கட்சி என்பது இந்நாட்டிலுள்ள எல்லாயின மக்களும் இன, மத மொழி பிரதேச எல்லை வேறுபாடுகளின்றி நேசிக்கக் கூடிய கட்சியாகும். எல்லோருரையும் ஒருமைப்படுத்தக் கூடிய கட்சியாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பலவீனமா நிலையில் இருக்கும் போது எவ்வாறு குருநாகல் மாவட்டத்தில் ஒரு பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சிலர் கேட்கின்றனர் . ஐக்கிய தேசிய கட்சி என்பது சாதாரண கட்சி அல்ல. சிங்களவர், தமிழர், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்த கட்சியாகும்.
சிறுபான்மையினக் கட்சியின் மூலமாக ஒருவர் போட்டியிட நினைத்தால் அதற்கு அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் புள்ளடியிடுவார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவ்வாறு ஒன்றில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையைப் பின்பற்றிய ஒருவர் அவர் முஸ்லிமாக இருக்கலாம், தமிழராக இருக்கலாம் எந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இனப் பாகுபாடு காட்டாமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.
பானகமுவ நிருபர்
No comments:
Post a Comment