கிழக்கு மாளகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது, நாங்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் - வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

கிழக்கு மாளகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது, நாங்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் - வியாழேந்திரன்

கிழக்கு மாளகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து ஆளுந்தரப்பு பிரதிநிதிகளை அதிகரிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத் தமிழர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு போராடும் இனமாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். நாங்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இன்றைய இருப்பு, நில, நிருவாகம் பறிபோகும் நிலையில் தமிழ் மக்கள் துடுப்பிழந்த அரசியல் தலைமைகளையே கொண்டிருக்கிறார்கள்.

சகல அதிகாரமும் உள்ள அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் எங்களின் இருப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் எம்மை பிழையாக வழிகாட்டிய தமிழ் தலைமைகளே ஆகும்.

கிழக்கில் தமிழர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு களத்தில் நிற்கின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கிழக்கில் உள்ள தமிழர்களின் நில வளத்தினையும், உரிமையினையும், அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்செல்ல தங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும்.

தமிழ் மக்கள் வாழ்வதற்குரிய, கல்வி, பொருளாதரம், விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி சார்ந்த, திட்டங்கள் இல்லாமல் தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரிப்பது தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.

தமிழ் மக்கள் இவர்களை ஆழமாக சிந்தித்து தமது வாக்குரிமையை கட்சி பேதங்களை மறந்து எம் இருப்பை இல்லாமல் செய்யும் கூட்டங்களுக்கு வாக்களிக்காமல் கிழக்கை துரித அபிவிருத்தியை முன்னெடுத்து கிழக்கை தமிழர்கள் அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான தரப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

வெல்லாவெளி நிருபர்

No comments:

Post a Comment