கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 178 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானத்தில் இக்குழுவினர் இன்று (02) பகல் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இக்குழுவினர், மாலைதீவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்களில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்தள விமான நிலையத்தில் அவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன் முடிவுகள் கிடைக்கும் வரை, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment