ICC தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகல் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

ICC தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகல்

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகியுள்ளார்.

கடந்த 04 ஆண்டுகளாக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த அவர், தனது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இவ்வாறு விலகியுள்ளார். 

எவ்வாறாயினும், அவருக்கு மேலும் 02 வருடங்கள் அப்பதவியில் இருக்க முடியும் என்ற போதிலும், அடுத்த 02 வருடங்களுக்கு கடமையாற்ற மாட்டார் என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அடுத்த தலைவருக்கான தேர்தல் இடம்பெறும் வரை, பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததால், ஷசாங்க் மனோகர் இவ்வாறு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (01) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை (பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சஷாங்க் மனோகர் ஐசிசி தவிசாளராக (Chairman) இருந்து வருகிறார்.

வரும் ஜூன் மாதம் ஐசிசி மாநாடு நடைபெறவுள்ளது. இந்தத் தருணத்தில் சஷாங்க் மனோகரின் பிசிசிஐ பதவிக்காலமும் ஐசிசி தவிசாளர் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

என். சீனிவாசனுக்குப் பதிலாக சஷாங்க் மனோகர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு கடந்த 2015 ஒக்டோபரில் நியமிக்கப்பட்டார். இது அவரது 2ஆவது பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்மோகன் டால்மியா மறைவையடுத்து சஷாங்க் மனோகர் 2015 ஒக்டோபரில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பிசிசிஐ செயல்பாடுகளில் சீர்திருத்தம் கோரும் முன்னாள் நீதிபதி முத்கல் கமிட்டியின் பரிந்துரைகள் மீதான தீவிர விசாரணை உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில், சஷாங்க் மனோகர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICC யின் புதிய விதிமுறைகளின்படி ஐசிசி தலைவராக பதவியேற்பவர் தன் சொந்த நாட்டு கிரிக்கெட் சபையின் பதவியில் இருப்பது கூடாது. இந்த அடிப்படையில்தான் அவர் தற்போது தனது பிசிசிஐ தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐசிசி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யும் முடிவுத் திகதி மே 23ஆம் திகதியாகும்.

தற்போது பிசிசிஐ தலைவர் பதவியை இவர் இராஜினாமா செய்ததையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு மனோகர் பெயரை பிசிசிஐ முன்மொழிய வேண்டும்.

மனோகர் இராஜினாமா செய்ததையடுத்து ஒரே ஆண்டில் 2ஆவது முறையாக பிசிசிஐ ஆனது, தலைவரில்லாத அமைப்பாக மாறியுள்ளது. தற்போது பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் சிறப்பு பொதுக்கூட்டத்தை நடத்தி 02 வாரங்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐபிஎல் தலைவர் ராஜிவ் ஷுக்லா, பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் முதனிலை வகிக்கின்றனர். முன்னாள் பொருளாளர் அஜய் ஷிர்கே, நடப்பு துணைத் தலைவர் கங்காராஜு ஆகியோரும் பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

No comments:

Post a Comment