
மூன்று விமானங்களின் மூலமாக 111 வெளிநாட்டு மாலுமிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
77 இந்திய மாலுமிகள் இன்று அதிகாலை 4.20 மணிக்கு இந்தியாவின் சென்னையிலிருந்து இண்டிகோ எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 6E 9034 என்ற விமானத்தில் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். விமானத்தில் விமானிகள் உட்பட 6 பணியாளர்கள் இருந்தனர்.
இதேவேளை 32 வெளிநாட்டு மாலுமிகளும் அதிகாலை 1.45 மணிக்கு தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ,ஆர் 668 என்ற விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் இரண்டு மாலுமிகள் அபுதாபியில் இருந்து எடிஹாட் எயர்ர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான EY 264 என்ற விமானத்தில் நள்ளிரவு 12.05 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாட்டிற்கு வருகை தந்த அனைத்து மாலுமிகளும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment