முடிவு நிலுவையில் இருந்ததால், MCC தொடர்பில் இலங்கைக்கு எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 26, 2020

முடிவு நிலுவையில் இருந்ததால், MCC தொடர்பில் இலங்கைக்கு எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவிப்பு

'மில்லேனியம் சவால்' 480 மில்லிய்ன டொலர் நிதி திட்டத்தின் எந்தவொரு நிதியும் இலங்கை அரசிடம் வழங்கப்படவோ, அரசினால் செலவிடப்படவோ இல்லை என, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான, அரசின் முடிவு நிலுவையில் இருந்ததால், திட்டத்தின் ஆரம்ப செயற்பாட்டுக்கான நிதி இரத்து செய்யப்பட்டது அல்லது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது என தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மில்லினியம் சவால் திட்டத்தை (MCC ஒப்பந்தம்) மீளாய்வு செய்த குழு தனது இறுதி அறிக்கையை நேற்று (25) ஜனாதிபதியிடம்  கையளித்தது.

இதன்போது, கடந்த அரசாங்கம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் MCC உடன்படிக்கைகளில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளதாகவும், இதன் கீழ் 7.4 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருப்பினும், அதற்கான கணக்கு விபரங்கள் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என, அறிக்கையை கையளித்த குழுவின் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே அமெரிக்க தூதரகம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மீளாய்வுக் குழுவின் அறிக்கை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என, ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment