கவனயீனத்துடன் செயற்பட்டால் மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றில் இலங்கை வெற்றி பெற்றிருந்தாலும் வைரஸ் இன்னமும் உலகை விட்டு அகலவில்லை. எனவே சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தின் ஆலோசனைகளுக்கு அமைய தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றி செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பதிவொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவிலிருந்து, உலகின் அனைத்து நாடுகளும் நோய் தொற்றினால் அவதியுறும் நிலையில், எமது நாடு அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியினால் குறிப்பிடத்தக்க வகையில் இந்தப் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.
இருந்த போதிலும் கொரோனா நோய்த் தொற்றானது முற்றாக இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். கவனயீனமான செயற்பாடுகள் நோய்த்தொற்றை மீண்டும் பரப்பக் கூடும். எனவே, சுகாதார துறை மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்றாக பின்பற்றுமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் வேண்டிக் கொள்கின்றேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment