தேர்தல்கள் முறைப்பாடுகளை தொலைபேசி, மின்னஞ்சல், வைபர், வாட்ஸ் அப், தொலைநகல் மற்றும் முகப் புத்தகத்தினூடாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் முறைப்பாடுகள் தொடர்பில் முகாமைப்படுத்துவதற்கான பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் காலப்பகுதியில் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சட்டவிரோத பிரசாரங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் இந்த பிரிவில் முறைப்பாடு பதிவு செய்ய முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முறைப்பாடுகளை, தொலைபேசி
011 2 886 179
011 2 886 421
011 2 886 117
தொலைநகல்
011 2 886 551
011 2 886 552
071 9 160 000 என்ற இலக்கத்தினூடாக வைபர் மற்றும் வாட்ஸ்அப் சமூக வலைத்தளங்களினூடாகவும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, complaint.pe2020@elections.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என்பதுடன் Election commission of Sri Lanka என்ற முகப்புத்தகத்திலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment