மிக நீண்ட காலத்திற்கு முன்னரே கருணாவை விசாரித்திருக்க வேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 24, 2020

மிக நீண்ட காலத்திற்கு முன்னரே கருணாவை விசாரித்திருக்க வேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானை மிக நீண்ட காலத்திற்கு முன்னரே யுத்த குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இலங்கை இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

எனினும் உண்மையில் கருணா அம்மானை யுத்த குற்றங்களுக்காக பல வருடங்களிற்கு முன்னரே விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானின் தலைமையின் கீழ் செயற்பட்ட படையணியினர் 1990ஆம் ஆண்டு ஜூனில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அவரது படையணியினர் 200 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

கருணாவை யுத்த குற்றங்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை துஷ்பிரயோகங்களிற்காக விசாரணை செய்ய வேண்டும் என வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment