எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலானது சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் சிந்தித்து வாக்குகளை அளிக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
மத்தியமுகாம் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை நேற்று சந்தித்து தேர்தல் முக்கியத்துவம் பற்றி விளக்கும் கூட்டம் மத்திய முகாமில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே மொட்டு சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒரு போதும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி தரப்போவதில்லை. மாறாக சிங்கள பிரதிநிதிகளைக்கே அது வழிவகுக்கும்.
தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளமையானது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அல்ல. மாறாக வாக்குகளை சிதறடித்து அம்பாறை மாவட்டத்தின் வாக்கு வங்கியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஊடான பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காவேயாகும்.
எனவே, எதிர்வருகின்ற தேர்தலில் வாக்குகளை சிதறடிக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொள்ளச் செய்ய வேண்டும். என்றார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் மத்திய முகாம் அமைப்பாளர் நஸார் ஹாஜி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.நவாஸ் உட்பட கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment