ஒரே இரவில் 3000 இராணுவத்தை கொலை செய்ததாக கூறுவதா ஜனாதிபதியின் பிறந்தநாள் வாழ்த்து? - News View

About Us

About Us

Breaking

Saturday, June 20, 2020

ஒரே இரவில் 3000 இராணுவத்தை கொலை செய்ததாக கூறுவதா ஜனாதிபதியின் பிறந்தநாள் வாழ்த்து?

தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக் கூறி பெருமையடைவதுதான் கருணா அம்மான் ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறும் முறையா என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து டுவிட்டரில் பதிவொன்றிட்டுள்ள அவர், “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களே. எத்தனை படையினரை தாம் கொன்றோம் என்று கூறி, அது குறித்து பெருமையடைவதுதான் ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கருணா அம்மான் வாழ்த்துத் தெரிவிக்கின்ற முறையா?” என குறிப்பிட்டுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் “ஆணையிறவில் ஒரே இரவில் இராணுவத்தினரில் 2000, 3000 பேரைக் கொலை செய்தோம்” என வெளியிட்ட கருத்து தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையிலேயே நேற்று ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாளுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

No comments:

Post a Comment