உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆறு SSP, மூன்று SP, இரண்டு ASP களுக்கு இடமாற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 22, 2020

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆறு SSP, மூன்று SP, இரண்டு ASP களுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட, உதவி, பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலுள்ள 11 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் தேவையின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்விடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

6 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), 3 பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP), 2 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) ஆகிய 11 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கத்துடனும் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த, டப்ளியூ திலகரத்ன (SSP), அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம்.

அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக இருந்த டி.வி.பி. அஜித் ஹேமசிறி (SSP), பொலிஸ் வித்தியாலய பணிப்பாளராக இடமாற்றம்.

பொலிஸ் வித்தியாலய பணிப்பாளராக இருந்த எச்.சீ.ஏ. புஷ்ப குமார (SSP), மேல் மாகாண புலனாய்வு பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவு பணிப்பாளராக இருந்த டி.ஜி.என்.டப்ளியூ.டீ. தல்துவ (SSP), பயங்கரவாத ஒழிப்பு பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்.

பயங்கரவாத ஒழிப்பு பிரிவு பணிப்பாளராக இருந்த ஏ.ஆர்.பீ.ஜே. அல்விஸ் (SSP), குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்.

நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பதவியிலிருந்த கே.ஜீ.எல். கீதால் (SSP), விசேட விசாரணை பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்.

No comments:

Post a Comment