கொரோனா வைரஸினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பல்வேறு நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் மெனிங் சந்தைக்கு வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மெனிங் பொதுச் சந்தையின் வர்த்தக சங்கம் விடுத்துள்ள அறிவித்தலில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மொத்த வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ள மெனிங் பொதுச் சந்தைக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை அவசியம் பின்பற்றுமாறும், மெனிங் பொதுச் சந்தைக்கான வர்த்தக சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment