ஒபாமா திறமையற்ற ஜனாதிபதியாக இருந்தார் - டொனால்டு டிரம்ப் பதிலடி - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

ஒபாமா திறமையற்ற ஜனாதிபதியாக இருந்தார் - டொனால்டு டிரம்ப் பதிலடி

முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா ஒரு திறமையற்ற ஜனாதிபதியாக இருந்தார் என தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி டிரம்பின் அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா சமீபத்தில் டிரம்ப் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அமெரிக்காவில் இணையத்தளம் மூலம் நடந்த ஒரு பாடசாலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஒபாமா பேசும்போது, “கொரோனா தொற்று இறுதியாக நாட்டின் திரைசீலையை கிழித்து விட்டது. அதிகாரிகளும் தாங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நாட்டின் தலைமையிடம் இருக்கும் தோல்விகளை இந்த பெருந்தொற்று காட்டி விட்டது. குறைந்தது கொரோனாவை கட்டுப்படுத்துவது போல நடிக்க கூட தெரியவில்லை. அமெரிக்காவின் மானத்தை வாங்கும் வகையில் தாறுமாறான கேள்விகளை ஆட்சிகள் இருப்பவர்கள் எழுப்புகின்றன” என்று அதிபர் டிரம்பை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒபாமா தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து டிரம்ப் கூறும்போது, “ஒபாமா ஒரு திறமையற்ற ஜனாதிபதியாக இருந்தார். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அவர் முற்றிலும் திறமையற்றவர்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோபீடனுக்கு ஆதரவாக ஒபாமா தீவிரமாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்தே அவர் டிரம்பின் அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது “சில விதிவிலக்குகளை தவிர அமெரிக்க முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. இது உண்மையான நல்ல விசயம்தான்” என்று கூறு உள்ளார்.

No comments:

Post a Comment