ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்மையினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

ஹிஜ்ரி 1441ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (23) மாலை தென்பட்டமையினால் நாளை நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.

புனித ஷவ்வால் மாத தலைப் பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

தலைப் பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad