இறக்குமதி பால் மா விலையின் அளவுக்கு உள்நாட்டு பால் மா விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

இறக்குமதி பால் மா விலையின் அளவுக்கு உள்நாட்டு பால் மா விலை அதிகரிப்பு

புதிய விலை
1 கிலோ கிராம் பால் மா - ரூபா. 945
400 கிராம் பால் மா - ரூபா. 380

பழைய விலை
1 கிலோ கிராம் பால் மா - ரூபா. 860
400 கிராம் பால் மா - ரூபா. 345

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலைக்கு சமனாகும் வகையில் உள்நாட்டு பால்மாக்களின் விலையை அதிகரிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சின் ஊடாக நிதி அமைச்சிற்கு விடுத்த வேண்டுகோளின் பேரில் மில்கோ, பெல்வத்தை, நெஸ்லே லங்கா பால் மா உற்பத்தி நிறுவனங்களுக்கு இவ்வாறு விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்நாட்டு பால் மா உற்பத்தி நிறுவனங்களுக்கு இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் குறித்த அனுமதிக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆயினும், விலை அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதோடு, அது அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என, அதன் அதிபர் கங்காணி லியனகே தெரிவித்தார்.

அதற்கமைய, ரூபா 345 ஆக இருந்த 400 கிராம் பால் மா பைக்கற்றின் விலை ரூபா 380 ஆகவும், ரூபா 860 ஆக இருந்த 1 கிலோ கிராம் பால் மா பைக்கற்றின் விலை ரூபா 945 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மில்கோ ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment