ட்ரோன் கெமராவை இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

ட்ரோன் கெமராவை இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழலில் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்காக ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ட்ரோன் கெமரா இயக்கக் கூடியவர்களை துரிதமாக பதிவு செய்துகொள்ளுமாறு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment