கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 03 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் 21 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 14ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், அது தொடர்ந்தும் மே மாதம் 03 ஆம் திகதி வரை 40 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு மே மாதம் 03ஆம் திகதியிலிருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக அந்நாட்டு மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 35,365 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை 1,152 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9,064 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment