கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, May 4, 2020

கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் கிறிஸ்தவர்கள் என்றும் இருவர் இந்துக்கள் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment