மறு அறிவித்தல் வரை இ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை ரத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

மறு அறிவித்தல் வரை இ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை ரத்து

இலங்கை போக்குவரத்துச் சபையில் பணி புரியும் அனைத்து சாரதிகள், நடத்துனர்களினதும் விடுமுறை இன்று (26) முதல், மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துகளை முன்னெடுக்க இன்றையதினம் (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 5,000 இற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளை இன்றையதினம் முதல் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக, அதன் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக ஸ்வர்ணகங்ச தெரிவித்தார்.

இதேவேளை, இன்றையதினம், கொழும்பிற்கு வருவதற்காக 27 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment