சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபை சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் முதலிடத்தை அவுஸ்திரேலிய அணி பிடித்துள்ளது. 2 ஆம் இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. ஆனால் முதல் மூன்று இடத்தில் உள்ள அணிகளுக்கு வித்தியாசம் ஒரு புள்ளி மட்டும் தான்.
அதன்படி 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதல் இடத்திலும், 115 புள்ளிகளுடன் நியூஸிலாந்து இரண்டாம் இடத்திலும், 114 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து நான்காம் இடத்திலும், 91 புள்ளிகளுடன் இலங்கை ஐந்தாம் இடத்திலும், 90 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா ஆறாவது இடத்திலும், 86 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும், 79 புள்ளிகளுடன் மேற்கிந்தியத்தீவுகள் எட்டாம் இடத்திலும், 57 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் ஒன்பதாம் இடத்திலும், 55 புள்ளிகளுடன் பங்களாதேஷ் பத்தாம் இடத்திலும் உள்ளன.
இந்திய அணி 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் முதலிடத்தை 2 புள்ளிகளினால் இழந்துள்ளது.
No comments:
Post a Comment