உறவினர் வீடு சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி - News View

About Us

About Us

Breaking

Friday, May 29, 2020

உறவினர் வீடு சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், 17 வயதான கிண்ணியா அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த கிண்ணியா தேசிய பாடசாலை மாணவன், நஜிமுதீன் எம். ரிஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கிண்ணியாவிலிருந்து, ஹொரவபொத்தானை பிரதேசத்திலுள்ள முக்கறவெவ பகுதிக்கு அவரது உறவினரின் வீட்டுக்கு வருகை தந்து இன்று மாலை குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment