கொரோனா அச்சுறுத்தல் இப்போதைக்கு முடியாது என அரசு அறிவித்துள்ளது - முன்னாள் எம்.பி இம்ரான் - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

கொரோனா அச்சுறுத்தல் இப்போதைக்கு முடியாது என அரசு அறிவித்துள்ளது - முன்னாள் எம்.பி இம்ரான்

கொரோனா அச்சுறுத்தல் இப்போதைக்கு முடியாது என அரசு மறைமுகமாக அறிவித்துள்ளது என முன்னாள் எம்.பி இம்ரான் மகரூப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நோன்பு பெருநாளையும் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

நோன்பு பெருநாளைக்கு சுமார் இன்னும் ஒரு மாதம் உண்டு. எனவே அந்த பெருநாளும் பள்ளியில் கொண்டாட முடியாது என்றால் கொரோனா அச்சுறுத்தல் இப்போதைக்கு முடியாது என்பதை அரசு ஏற்றுக் கொள்கின்றது என்றுதானே அர்த்தம்.

அப்படி என்றால் ஏப்ரல் 19 உடன் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று சுகாதார அமைச்சர் அறிக்கை விட்டது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?

இதனை வைத்து நோக்கும் போது கொரோனா விடயத்தில் அரசு உண்மையான தகவல்களை மக்களுக்கு சொல்கின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. நேரத்துக்கு ஒரு தகவல். அல்லது ஆளுக்கொரு தகவல் என்ற அடிப்படையிலேயே விடயங்கள் வெளியிடப் படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் நாம் இறைவனுக்காகவே நோன்பு நோற்கிறோம். அவனது கட்டளையையே பின்பற்றுகின்றோம். இதனை மனதில் வைத்து நாம் செயற்படுவோம். நமது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துவோம்.

நம்மையும் இந்நாட்டு பிரசைகளாக மதிக்கின்ற ஒரு ஆட்சி வர இந்த நோன்பு காலத்தில் பிரார்த்திப்போம். நமது மார்க்க அடிப்படையில் செயற்பட இடமளிக்கும் ஆட்சி வர பிரார்த்திப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment