தேர்தல் தின மனு 9ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 29, 2020

தேர்தல் தின மனு 9ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பு ஆகிய வர்த்தமானிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த மனு, 9ஆவது நாளாக இன்று (29) முற்பகல் 10.00 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், 9ஆவது தடவையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment