சஜித் உள்ளிட்ட 99 பேரின் உறுப்புரிமை நீக்கம் - ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 29, 2020

சஜித் உள்ளிட்ட 99 பேரின் உறுப்புரிமை நீக்கம் - ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக (Samagi Jana Balawegaya) வேட்புமனு தாக்கல் செய்த சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் உறுப்புரிமையை இடைநீக்கம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், ஐ.தே.க. தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (29) காலை இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர், வேறு கட்சிகளின் ஊடாக உறுப்புரிமையை பெற்று எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுவிலும் கையொப்பம் இட்டுள்ள அல்லது அவ்வாறு மேற்கொள்ள முடிவு செய்யும் எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் கட்சியின் யாப்பின் பிரிவுகளின் கீழ், செயற்குழுவின் முன் அனுமதியை எழுத்து மூலமாக பெற வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment