65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 3, 2020

65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்

தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வெசாக் பூரணை தினத்தன்று சலுகை திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W.தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 33 குற்றங்களுக்குள் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி வரை அபராதப் பணம் செலுத்த முடியாத குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளையும் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில கைதிகளுக்கு 7 நாட்கள் மன்னிப்பின் அடிப்படையில் செல்ல அனுமதி வழங்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment