5,000 ஜூன் கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு - ஆணைக்குழுவின் உத்தரவுக்கு மதிப்பளித்து முடிவு - பட்டதாரிகள் கொடுப்பனவும் இவ்வாறே இடைநிறுத்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

5,000 ஜூன் கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு - ஆணைக்குழுவின் உத்தரவுக்கு மதிப்பளித்து முடிவு - பட்டதாரிகள் கொடுப்பனவும் இவ்வாறே இடைநிறுத்தப்பட்டது

கொவிட்-19 தொற்று நோயால் வருமானத்தை இழந்தவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட ரூபா 5,000 கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கு வழங்காதிருக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில், இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அமைச்சரவை விசேட கவனம் செலுத்தியதற்கு அமைய, இடம்பெற்ற கல்துரையாடலை அடுத்து, தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை மதித்து ஜூன் மாதத்திற்கான ரூபா 5,000 கொடுப்பனவு வழங்காதிருக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னர், தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய, பட்டதாரிகளுக்கான ரூபா 20,000 கொடுப்பனவை இடைநிறுத்தும் தீர்மானத்தை மேற்கொண்டமை இதற்கு முன்னுதாரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நோயால் வருமானத்தை இழந்த சமுர்த்தி பெறுநர்கள் உட்பட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ. 2,500 கோடிக்கும் 3,000 கோடிக்கும் இடையிலான செலவிடப்பட்டதாகவும், மே மாதத்திற்கு 51 இலட்ச்து 44 ஆயிரத்து 46 பேருக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு, மே மாதத்திற்கு ரூபா 25,720 மில்லியன் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக நிதியை பெற்றுக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியதோடு, இதற்காக மேலதிகமாக ரூபா 16,000 மில்லியனை நிதியாக திரட்ட, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு, குறுகிய கால கடனாக நிதி பெறுவது மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரியின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment