கழுத்து இறுக்கப்பட்ட கறுப்பினத்தவர் மரணம் : 4 பொலிஸார் பணி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

கழுத்து இறுக்கப்பட்ட கறுப்பினத்தவர் மரணம் : 4 பொலிஸார் பணி நீக்கம்

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கறுப்பின ஆடவர் ஒருவரின் கழுத்தின் மீது ஏறி இறுக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த ஆடவர் உயிரிழந்ததை அடுத்து நான்கு மினசோட்டா மாநில பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அந்தப் பிராந்தியத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதோடு பொலிஸ்கார்கள் மீது கிறுக்கினர்.

இந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளும் தற்போது முன்னாள் ஊழியர்கள் என்று மென்னியாபொலிஸ் நகர தலைமை பொலிஸ் அதிகாரி மெடரியா அரடொன்டோ குறிப்பிட்டுள்ளார். வெளியாகி இருக்கும் வீடியோவில் ஜோர்ஜ் ப்ளொயிட் என்ற அந்தக் கறுப்பின ஆடவர், “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று அந்த வெள்ளையின பொலிஸாரிடம் முனகுவது பதிவாகியுள்ளது.

உணவு விடுதி ஒன்றில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 46 வயதான ப்ளொயிட், பொலிஸ் விசாரணைக்குப் பின் உயிரிழந்ததாக மினசோட்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதை நகர மேயர் ஜகப் ப்ரே உறுதி செய்துள்ளார்.

கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அமெரிக்க பொலிஸாரின் ஒடுக்குமுறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment