மே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு - ஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

மே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு - ஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு

எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, மே மாதம் 31 ஞாயிற்றுக்கிழமை, ஜுன் மாதம் 04 வியாழன் மற்றும் பொசொன் பௌர்ணமி தினமான ஜுன் மாதம் 05 வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment