இந்தியா, அவுஸ்திரேலியாவிலிருந்து 304 பேர் இலங்கையை வந்தடைந்தனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

இந்தியா, அவுஸ்திரேலியாவிலிருந்து 304 பேர் இலங்கையை வந்தடைந்தனர்

இலங்கைக்கு வர முடியாமல், அவுஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 304 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 02 விசேட விமானங்கள், இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

முதலில் இந்தியா, மும்பாய் நகரில் சிக்கியிருந்த இலங்கையின் முப்படை வீரர்கள் 18 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1042 எனும் விசேட விமானம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 286 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 605 எனும் விசேட விமானம், இன்று அதிகாலை 5.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment