நாடு முழுவதும் மே 26 முதல் இரவில் மாத்திரம் ஊரடங்கு - மாவட்டங்களிடையே போக்குவரத்துக்கு அனுமதி - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

நாடு முழுவதும் மே 26 முதல் இரவில் மாத்திரம் ஊரடங்கு - மாவட்டங்களிடையே போக்குவரத்துக்கு அனுமதி

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மே மாதம் 26 செவ்வாய் முதல் ஊரடங்குச் சட்டம், மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை அடுத்து, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் கடந்த மார்ச் 23 தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், இரணங மாதங்களின் பின்னர், மே 26ஆம் திகதி திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad