மகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் 26ஆம் திகதி ஆரம்பம் - காலை 4.30 தொடக்கம் 6.00 மணிவரையே இடம் பெறும் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

மகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் 26ஆம் திகதி ஆரம்பம் - காலை 4.30 தொடக்கம் 6.00 மணிவரையே இடம் பெறும்

மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

பஸ் போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில் கொழும்பு கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் நிட்டம்பு வரையில் மாத்திரமே இடம்பெறும். 

இலக்கம் 05 வீதி ஊடாக வரும் மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் மினுவாங்கொடை வரை மாத்திரமே வரும் காவி வீதி ஊடாக வரும் பஸ்கள் பாணந்துறை வரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக வரும் பஸ்கள் அவிசாவளை வரையும் பயணிக்கும்.

அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு வரும் பஸ்கள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும். அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார் .

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பஸ் சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பஸ்கள் போதியளவு இல்லா விட்டால், நாம் அவற்றை கொண்டு வருவோம். சேவையில் ஈடுபடாத பஸ்களையும் நாங்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம். பஸ்களில் ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு அனைத்துப் பயணிகளுக்கும் உரிமை உண்டு. கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம்' என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment