மே 24, 25 நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 22, 2020

மே 24, 25 நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

எதிர்வரும் மே 24, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மே 25, திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிளிலும் நாளை (23) சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் (23) நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே 26, செவ்வாய்க்கிழமை முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

No comments:

Post a Comment