இரகசியமாக வகுப்பு நடத்திய ஆசிரியர், 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில் - வகுப்பறை சீல் வைக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 20, 2020

இரகசியமாக வகுப்பு நடத்திய ஆசிரியர், 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில் - வகுப்பறை சீல் வைக்கப்பட்டது

கொவிட்19 விதிமுறைக்கமைய சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரசியமாக நடத்திய ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

கொவிட்19 தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் தலவாக்கலை பகுதியில் இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயின்ற மாணவர்கள் 14 பேரையும் சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தபட்டு வகுப்பினை நடாத்தி வந்த வகுப்பறையினை பொது சுகாதார பரிசோகர்களினால் நேற்று சீல் வைக்கபட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக்கசேபால தெரிவித்தார்.

தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களும் அவர்களுடைய வீடுகளில் ஜுன் மாதம் 2 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

No comments:

Post a Comment

Post Bottom Ad