தாய் இறந்த துயரம் தாங்காமல் தனக்குத்தானே தீமூட்டி 14 வயது மாணவன் பரிதாபமாக பலி ! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

தாய் இறந்த துயரம் தாங்காமல் தனக்குத்தானே தீமூட்டி 14 வயது மாணவன் பரிதாபமாக பலி !

பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியில், தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 3 மாதத்திற்கு முன்னர் குறித்த சிறுவனின் தாயார் உயிரிழந்துள்ளார். தாயார் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த மாணவன் மன விரக்தியில் இருந்துள்ளான். 

இந்நிலையில் கடந்த 29 ஆம் திகதி வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

தீக்காயங்களுக்குள்ளான சிறுவன் உடனடியாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அன்றைய தினமே மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.

No comments:

Post a Comment