உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களில் 10 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இதுவரை 10 லட்சத்து 75 ஆயிரத்து 970 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்
அமெரிக்கா - 1,58,921
ஸ்பெயின் - 1,42,450
இத்தாலி - 78,249
பிரான்ஸ் - 50,212
ஜெர்மனி - 1,26,900
துருக்கி - 53,808
ரஷியா - 13,220
ஈரான் - 76,318
பிரேசில் - 38,039
சீனா - 77,642
கனடா - 22,095
பெல்ஜியம் - 11,892
பெரு - 11,129
சுவிட்சர்லாந்து - 23,900
அயர்லாந்து - 13,386
மெக்சிகோ - 11,423
ஆஸ்திரியா - 13,110
No comments:
Post a Comment