ஜூன் 05, 06ஆம் திகதிகளில் மதுபான நிலையங்கள், இறைச்சிக்கடைகளுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

ஜூன் 05, 06ஆம் திகதிகளில் மதுபான நிலையங்கள், இறைச்சிக்கடைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொது நிர்வாகம், உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்திற்கான பொசன் பௌர்ணமி தின உற்சவத்தையிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினங்களில் பல்பொருள் அங்காடிகளில் மதுபான விற்பனை மற்றும் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு இறைச்சிக்காக விலங்குகள் வெட்டும் இடங்கள், கசினோ நிலையங்கள், சூதாட்ட பந்தயங்கள், கிளப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment