பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனாவா? வெளியானது பரிசோதனை முடிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனாவா? வெளியானது பரிசோதனை முடிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 200-ஐ தாண்டியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பிரபலமான அறக்கட்டளையின் தலைவர் பைசல் எடி என்பவர் பிரதமர் இம்ரான்கானை கடந்த வாரம் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு நடந்த சில தினங்களுக்கு பிறகு பைசல் எடிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்ரான்கானுக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, இம்ரான்கான் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும் இந்த தகவல் பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஷபீர் மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தனக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற தகவலால் இம்ரான்கான் சற்று நிம்மதியடைந்துள்ளார்.

No comments:

Post a Comment