கெப்பித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கொலை - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 14, 2020

கெப்பித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கொலை - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில்

கெப்பித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர்களை கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (14) முன்னிலைப்படுத்தியபோதே. இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கெப்பித்திகொல்லாவ, இகிரிகொல்லேவ, கோனுகத்தனாவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். 

அதேயிடத்தைச் சேர்ந்த ஜெ. செலிட்டர் (24) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதோடு, கைகலப்பை தடுக்கச் சென்ற மரணித்த இளைஞனின் சகோதரர் ஜெ. விஜயசுந்தரம் (34) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இக்கொலையை புரிந்த பிரதான சந்தேகநபர் உட்பட 05 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment