சுகாதார அதிகாரிகள் கூறும் நிலைப்பாட்டிற்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் - அமைச்சர் பந்துல - News View

About Us

Add+Banner

Thursday, April 30, 2020

demo-image

சுகாதார அதிகாரிகள் கூறும் நிலைப்பாட்டிற்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் - அமைச்சர் பந்துல

6bbb91ca-bandula_850x460_acf_cropped_850x460_acf_cropped
(ஆர்.யசி) 

கடந்த காலங்களில் டெங்கு நோய் காரணமாக 500, 600 பேர் உயிரிழந்த நிலையிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக இப்போது ஏழு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என கூறும் அமைச்சரை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா வைரஸ்சினால் பாதிக்கப்பட்ட இறுதி நபர் குணமடையும் வரையில் தேர்தலை நடத்தக்கூடாதென்றால் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தேர்தலை நடத்த முடியாது எனவும் கூறுகின்றார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைக் கூறினார். 

அதேபோல் தேர்தல் நடத்தப்படுவது குறித்து தீர்மானங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவே முன்னெடுக்க வேண்டும். தேர்தல்கள் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் தீர்மானம் எடுப்பதும் இந்த நாட்டின் சுகாதார தன்மைகள் மக்களின் பாதுகாப்பு குறித்து சுகாதார அதிகாரிகள், வைத்தியர்கள் கூறும் தீர்மானங்களுக்கு அமையவேயாகும். 

ஆகவே இது குறித்து ஜனாதிபதி, பிரதமருக்கோ அல்லது அமைச்சரவைக்கோ தனித் தீர்மானம் எடுக்கவோ அல்லது தீர்மானங்களை அறிவிக்கவோ முடியாது. எமது எதிர்பார்ப்பும் நாளைய தினமே அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட்டு இந்த நோய் இல்லாது போய் வழமையான நிலைமைகள் உருவாக வேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறோம். 

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்க முடியும் என நம்புகின்றோம். இப்போது தேர்தலை நடத்துவது அல்ல எமது நோக்கம், முதலில் மக்களை பாதுகாக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

தேர்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் கூறும் நிலைப்பாட்டிற்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *