ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் திறக்கப்படும் - ஜனாதிபதி செயலணி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் திறக்கப்படும் - ஜனாதிபதி செயலணி

(இராஐதுரை ஹஷான்) 

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளும் திறந்திருக்கும் என அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் பொதுஜன பெரமுன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ச தலைமையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராட்சியின் பங்குப்பற்றலுடன் இடம் பெற்றது. 

இக்கூட்டத்தில் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் திறந்திருக்கும். 

பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆயுர்வேத மருந்து விற்பனை நிலையங்களில் ஒன்றேனும் குறைந்தப்பட்சம் அத்தியாவசிய மருந்து பொருள் விநியோக நடமாடும் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படும். 

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மருத்துவ மஞ்சள் கட்டை உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகள் தற்போது அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றை மேலும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆயுர்வேத சிகிச்சை முறைமைகளை முன்னெடுப்பவர்களுக்கு ஆயுர்வேத வைத்தியர்கள் சிகிச்சை பெறுபவரது வீட்டுக்கு சென்று சிகிச்சை வழங்க அனுமதி வழங்கப்படும்.

No comments:

Post a Comment