உங்கள் பாதுகாப்பை நானே ஏற்றுள்ளேன், வீட்டில் இருப்பதே உங்கள் பொறுப்பு - ஜனாதிபதி கோட்டாபய - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

உங்கள் பாதுகாப்பை நானே ஏற்றுள்ளேன், வீட்டில் இருப்பதே உங்கள் பொறுப்பு - ஜனாதிபதி கோட்டாபய

"முழு உலகத்தையும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் என்ற பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது முடிந்தவரை நீங்கள் வீட்டில் இருப்பதுதான் அது."

"உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பாதுகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தனது டுவிட்டர் தளத்தினூடாக அறிவித்துள்ளார்.

அதேபோன்று, ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து எமது நாட்டைப் பாதுகாக்க, தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையைத் தயவு செய்து செய்யுங்கள்!” என்றும் ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டுகொண்டுள்ளார். 

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களென சந்தேகிக்கப்படுபவர்களையும் அவர்களுடன் பழகியவர்களையும் மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment