காலநிலை நெருக்கடியை அலட்சியம் செய்தமைக்கான இயற்கையின் பதிலே கொரோனா - பரிசுத்த பாப்பரசர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

காலநிலை நெருக்கடியை அலட்சியம் செய்தமைக்கான இயற்கையின் பதிலே கொரோனா - பரிசுத்த பாப்பரசர்

கொரோனா வைரஸ், காலநிலை மாற்றத்தினால் உருவாகியுள்ள நெருக்கடிகளை அலட்சியம் செய்தமைக்கான இயற்கையின் பதிலாகயிருக்கலாம் என பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார். 

பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் நெருக்கடி உற்பத்திகளின் வேகத்தை குறைப்பதற்கும், நுகர்வின் அளவை குறைப்பதற்கும், இயற்கை உலகை புரிந்துகொள்வதற்கும் அது குறித்து சிந்திப்பதற்குமான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பேரழிவுகளிற்கு நாங்கள் பதிலளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் யார் இப்போது அவுஸ்திரேலிய காட்டு தீ குறித்து, பேசுகின்றனர், யார் தற்போது வெள்ளத்தை பற்றி பேசுகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார். 

இவை இயற்கையின் பழிவாங்கலா என்பது எனக்கு தெரியாது ஆனால் நிச்சயமாக இது இயற்கையின் பதில் என பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார். 

வத்திக்கானின் உள்ள எனது இல்லத்தில் நான் இந்த பெரும் நிச்சயமற்ற தருணத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் எனது தவறுகளிற்காக ஒவ்வொரு நாளும் பாவமன்னிப்பை கேட்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். 

வீடுகள் அற்றவர்களை வாகனத் தரிப்பிடங்களில் தனிமைப்படுத்தக் கூடாது ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார். 

லாஸ்வெகாசில் வாகனத் தரிப்பிடத்தில் வீடுகள் அற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் படத்தை பார்த்தேன் என குறிப்பிட்டுள்ள பாப்பரசர் ஆனால் ஹோட்டல்கள் காலியாக உள்ளன ஆனால் வீடுகள் அற்றவர்கள் ஹோட்டல்களிற்கு செல்ல முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். 

இதுவே வறிய மக்களை கவனிக்க வேண்டிய தருணம் ஆனால் சமூகம் எப்போதும் அவர்களை காப்பாற்றப்பட்ட விலங்குகளாக கருதுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனரஞ்சக அரசியல்வாதிகள் 1933 இல்ஹிட்லர் உரையாற்றியது போன்று உரையாற்றுகின்றனர் என தெரிவித்துள்ள பாப்பரசர் அவர்களின் எழுச்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment