இந்து பெண்ணின் உடலை சுமந்து சென்ற முஸ்லீம்கள்..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

இந்து பெண்ணின் உடலை சுமந்து சென்ற முஸ்லீம்கள்..!

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு உத்தரவு போன்ற இக்கட்டான சூழ்நிலையில், மத வேறுபாடு பார்க்காமல் இந்து பெண்ணின் உடலை சுமந்து சென்று தகனம் செய்ய உதவிய இஸ்லாமிய இளைஞர்களை, மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே அடைபட்டுக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் கடந்த 6 ஆம் திகதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அப்போது, அவருடைய 2 மகன்கள் மட்டுமே அருகில் இருந்தனர். 

ஊரடங்கு உத்தரவு காரணமாக, வெளியூரில் உள்ள அவர்களின் உறவினர்களால் அங்கு வர முடியவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் மகன்கள் இருவரும் திகைத்து நிற்க, "நாங்கள் இருக்கிறோம்" எனக் கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இஸ்லாமிய இளைஞர்கள் உதவ முன்வந்தனர். 

ஆனால், தகனம் செய்யும் இடத்திற்கு உடலை எடுத்துச் செல்ல வாகனங்கள் ஏதும் கிடைக்காததால், இறந்த பெண்மணியின் உடலை சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் சுமந்து சென்று தகனம் செய்ய உதவி செய்துள்ளனர் அந்த இளைஞர்கள். 

கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு உத்தரவு போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மத வேறுபாடு பார்க்காமல் உதவிய இளைஞர்களை, அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். 

அத்துடன், "இந்த சம்பவம், இந்து - இஸ்லாமியர் இடையே உள்ள சகோதரத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது" என, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத், தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment